உலகம்

பிரிட்டன் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு ஆண் குழந்தை!

DIN


பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகனுக்கு திங்கள்கிழமை காலை ஆண் குழந்தை பிறந்தது. 
பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும், முன்னாள் அமெரிக்க நடிகை மேகனுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் விண்ட்ஸர் அரண்மனையில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. 
திருமணம் முடிந்து, கடந்த அக்டோபரில் மேகன் கர்ப்பமாக உள்ளார் என அரண்மனை வட்டாரங்கள் அறிவித்தன. 
இந்நிலையில், திங்கள்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 5.26 மணிக்கு  மேகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.2 கிலோ எடையுடையதாக இருந்தது. தாயும், சேயும் பூரண நலத்துடன் இருப்பதாக இளவரசர் ஹாரி தெரிவித்தார். 
ஹாரியின் குழந்தை, பிரிட்டிஷ் அரசி எலிசபெத்துக்கு 8-ஆவது பேரக்குழந்தை என்றும், பிரிட்டன் அரியணை உரிமை கோரும் வரிசையில் 7-ஆவதாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT