முகப்பு
உலகம்

ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் மியான்மர் சிறையில் இருந்து விடுவிப்பு

மியான்மரில் 2017-ஆம் ஆண்டு மியான்மர் ராணுவமும், ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களும் போரிடுவது தொடர்பான உள்நாட்டு

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:51 AM
பகிர்:

யாங்கூன்: மியான்மரில் 2017-ஆம் ஆண்டு மியான்மர் ராணுவமும், ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களும் போரிடுவது தொடர்பான உள்நாட்டு பாதுகாப்பு ரகசியங்களை கசியவிட்டதாக சிறையில் அடைக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த 2 பத்திரிகையாளரையும் தற்போது மியான்மர் அரசு விடுவித்துள்ளது. 

மியான்மர் நாட்டின் பாதுகாப்புக்குரிய ரகசியத்தை திருடியதாக கூறி அவர்கள் இருவருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் கடந்தண்டு செப்டம்பர் மாதம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

மியான்மரில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மியான்மர் ராணுவத்துக்கும், ரோஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்தின் பொழுது, ரஹின் மாகாணத்தில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன்(32) மற்றும் க்யூ ஸோ ஓஓ இருவரும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். அப்பொழுது அந்தப் பகுதியில் ராணுவம் நிகழ்த்திய கொடூர தாக்குதல்களைப் பற்றித் தொடர்ந்து எழுதி வந்தார்கள்.

பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி அவர்கள் இருவரும் காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து ரகசிய ஆவணங்களை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, சட்ட விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக  கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவியாக இருந்த காவலரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் பிணையில் கூட விடுவிக்கப்படாமல், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கானது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலாகும் என சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் அரசின் ரகசிய சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் இருவர் மீதான வழக்கை விசாரித்த மியான்மரின் யங்கூன் வடக்கு மாவட்ட நீதிபதி ஏய் வின், 'அரசாங்க ரகசிய சட்டங்களை மீறி ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள்  வா லொன்(32) மற்றும் க்யூ ஸோ ஓஓ,( 28)  இருவரும் ரகசிய ஆவணங்களை சேகரித்து உள்ளனர்' என உறுதி செய்தார்.

அத்துடன் குற்றவாளிகள்  அரசு ரகசிய  சட்ட பிரிவு 3.1(சி)-யை மீறி உள்ளதால் அவர்களுக்கு  ஏழு ஆண்டுகளுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதே நேரம் டிசம்பர் 12 ல் இருந்து குற்றவாளிகள் ஏற்கனவே சிறையில் அடைக்கபட்ட காலம் கருத்தில் கொள்ள வேண்டும் என தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். 

இது குறித்து ராய்ட்டர்ஸ் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ஜே அட்லெர் கூறுகையில், இன்று மியான்மரில் ஒரு சோகமான நாள். ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன் மற்றும் க்யூ ஸோ ஓஓ இருவருக்கு மட்டும் அல்ல, உலகம் முழுவதும் உள்ள செய்தி ஊடகங்களுக்கும்தான் என தெரிவித்திருந்தார். 

இதனிடையே, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பத்திரிகையாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஓராண்டுக்கும் மேலாக மியான்மர் அரசுக்கு பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், 'கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை எவ்வித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதே கருத்தை இங்கிலாந்து, ஸ்வீடன், வங்காளதேசம் ஆகிய நாடுகளும் வலியுறுத்தி வந்தன. 

பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்பட்ட தாக்குதல். எனவே தங்களது செய்தியாளர்களை மியான்மர் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் கோரி வந்தது. 

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த வா லொன் மற்றும் க்யூ ஸோ ஓஓ ஆகியோரை மியான்மர் அரசு இன்று விடுவித்துள்ளது. 

Reuters: Wa Lone and Kyaw Soe Oo, Reuters reporters jailed in Myanmar, freed from prison

முழு கட்டுரையைப் படிக்க →