உலகம்

நியூஸிலாந்து தாக்குதலில் ஈடுபட்டவர் மீது பயங்கரவாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

DIN

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில் மார்ச் 15-ஆம் தேதி பிரென்டன் ஹாரிஸன் டாரன் என்பவர் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தத் தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர், இவர்களில் 5 பேர் இந்தியர்கள். 

இது நியூஸிலாந்தில் நடைபெற்ற மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவமாக அமைந்துவிட்டது. இதையடுத்து ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தானியங்கி துப்பாகி வகைகளை தனிநபர் பயன்படுத்த தடை விதித்து நியூஸிலாந்து அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவைச் சேரந்த பிரென்டன் ஹாரிஸன் டாரன் மீது பயங்கரவாத பிரிவின் கீழ் நியூஸாலந்து காவல்துறையால் செவ்வாய்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT