உலகம்

சீனாவில் தொடங்கியது சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி: ஷிச்சின்பிங் துவக்கி வைப்பு

DIN


2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நவம்பர் 5ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இப்பொருட்காட்சியின் துவக்க விழாவில் கலந்து கொண்டு தலைமை உரை நிகழ்த்தினார்.

அவர் பேசுகையில், திறப்பு தன்மை வாய்ந்த ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் பகிர்வு படைத்த உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாகக் கட்டியமைக்குமாறு பல்வேறு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் வெளிநாட்டுத் திறப்பு பற்றிய 5 நடவடிக்கைகளை ஷிச்சின்பிங் வெளியிட்டார். ஓராண்டு காலத்தில், இந்த 5 நடவடிக்கைகளும், படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டுத் திறப்பை முன்னேற்றும் வகையில், “வெளிநாட்டுத் திறப்பு” என்ற அடிப்படை தேசிய கொள்கையில் சீனா தொடர்ந்து ஊன்றி நின்று வருவதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அதே வேளையில், பொருளாதார உலகமயமாக்கத்தின் வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றும் வகையில், ஐ.நா., 20 நாடுகள் குழு, ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் நாடுகள் முதலிய அமைப்பு முறைமைகளுடனான ஒத்துழைப்பிலும் சீனா ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது, 137 நாடுகள் மற்றும் 30 சர்வதேச அமைப்புகளுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய 197 ஒத்துழைப்பு ஆவணங்களில் சீனா கையொப்பமிட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT