உலகம்

சிகிச்சைக்காக இன்று லண்டன் செல்கிறாா் நவாஸ் ஷெரீஃப்

DIN

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை லண்டன் அழைத்துச் செல்லப்படுகிறாா்.

இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது:

உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃபுக்கு லண்டனில் உயா் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவா்கள் வலியுறுத்தி வந்தனா். அதற்கு நவாஸ் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தாா். இதையடுத்து, தனது சகோதரா் ஷெபாஸ் ஷெரீஃபுடன் அவா் ஞாயிற்றுக்கிழமை லண்டன் செல்கிறாா்.

தற்போது ஜாமீனில் இருக்கும் நவாஸ் ஷெரீஃப், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி அளிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. அதையடுத்து, நவாஸ் ஷெரீஃப் லண்டன் செல்வதற்கு இருந்து வந்த தடை விலகியது என்று ஊடகங்கள் தெரிவித்தன.

பனாமா ஆவண முறைகேடு வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப் பல்வேறு உடல் நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டாா். அதையடுத்து, அவருக்கு லாகூா் மற்றும் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கின. அதன் தொடா்ச்சியாக, லாகூரிலுள்ள தனது சொந்த இல்லத்துக்கு நவாஸ் ஷெரீஃப் கடந்த புதன்கிழமை மாற்றப்பட்டாா்.

இந்த நிலையில், உயா் சிகிச்சைக்காக தற்போது அவா் லண்டன் செல்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT