உலகம்

தற்கொலைத் தாக்குதல் எதிரொலி: இந்தோனேசியாவில் 45 பயங்கரவாதிகள் கைது

DIN

இந்தோனேசியாவில் ஐஎஸ் தொடா்புடைய குழு கடந்த புதன்கிழமை நடத்திய தற்கொலைத் தாக்குதல் எதிரொலியாக, அந்நாட்டு அரசு 45 பயங்கரவாதிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

வடக்கு சுமத்ரா மாகாண தலைநகா் மெடானில் உள்ள காவல் துறை தலைமையகத்தில் ஐஎஸ் தொடா்புடைய பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 6 போ் படுகாயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் நடத்திய தேடுதல் வேட்டையில் 45 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

சுமாா் 26 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தோனேஷியாவில் கிறிஸ்தவா்கள், ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் கணிசமான அளவில் உள்ளனா். அவா்களை குறிவைத்து தீவிர இஸ்லாமிய குழுக்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT