உலகம்

ஊராங்குட்டானுக்கும் மனித உரிமை பொருந்தும்: உயிரியல் பூங்காவில் இருந்து ஓய்வு பெறும் சாண்ட்ரா

DIN


மனிதனல்லாத ஒரு உயிரினம் மனித உரிமையைப் பெற்றிருக்கும் சுவாரஸ்ய சம்பவம் அர்ஜென்டினாவில் நடந்துள்ளது.

அந்த விலங்கு வேறு எதுவுமல்ல, மனித இனம் தோன்றியதாகக் கருதப்படும் ஊராங்குட்டான்தான்.

25 ஆண்டுகளுக்கு முன்பு சான்ட்ரா என்ற ஊராங்குட்டான் அர்ஜென்டினாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பிறந்தது. அந்த நாள் முதல் அது அங்கே தனிமையிலேயே வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து விலங்குகள் நல வாரிய அமைப்பு ஒன்று சாண்ட்ராவை வெளியே சுதந்திரமாக ஊராங்குட்டான் இனம் வாழும் பகுதியில் விட வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை நாடினார்.

மனித உரிமை அடிப்படையில், உயிரியல் பூங்காவில் தனிமையில் வாழ்ந்து வரும் ஊராங்குட்டானுக்கு விடுதலை அளித்து, இனியாவது அதன் இனத்தோடு அது சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் மனித இனம் அல்லாத ஒரு உயிரினம், மனித உரிமையைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT