உலகம்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கொண்டு வரும் புதிய வாய்ப்புகள்!

DIN


நவ சீனாவின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்துகையில், சீன மக்கள் உலக மக்களுடன் சேர்ந்து மனித குலத்தின் பொது எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

நிதி நெருக்கடிக்குப் பின் உலகளவில் பொருளாதாரம் மந்தமானவளர்ச்சி நிலையில் சிக்கியிருந்ததன்பின்னணியில்ஷிச்சின்பிங்2013ஆம் ஆண்டு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவை முன்வைத்தார்.

கடந்த 6 ஆண்டுகளில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் வழிமனித குலத்தின் பொது எதிர்காலத்தை உருவாக்குவதற்கு  சீனா இடைவிடாமல் உயிராற்றலை வழங்கி வருகின்றது.

உலக வங்கி வழங்கிய அறிக்கைகளின்படி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் மூலம் பல்வேறு நாடுகளில் 76 இலட்சம் பேர் அதி வறுமை நிலைமையிலிருந்தும், 3 கோடியே 20 இலட்சம் பேர் நடுத்தர வறுமை நிலைமையிலிருந்தும் விடுவிக்கப்பட வாய்ப்புண்டு. அவற்றின் வர்த்தகத் தொகையில் 2.8 விழுக்காடு முதல் 9.7 விழுக்காடு அதிகரிப்பு காணப்படும். உலக வர்த்தகம் 1.7 விழுக்காடு முதல் 6.2 விழுக்காடு வரை அதிகரிக்கும்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் மூலம், கிழக்கு ஆப்பிரிக்காவில் முதலாவது உயர்வேக நெடுஞ்சாலையும், மாலத்தீவில் முதலாவது கடல் கடந்த பாலமும், பெலாரஸில் அந்நாட்டின் முதலாவது மகிழுந்து தயாரிப்பு நிறுவனமும், கசகஸ்தானில் அந்நாட்டுக்குரிய கடல் வழி நுழைவாயிலும் கட்டியமைக்கப்பட்டுள்ளன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT