உலகம்

காஷ்மீா் நிலவரம்: ஐ.நா. கவலை

DIN

காஷ்மீரில் போதிய அளவில் மருத்துவ உதவிகள் வழங்க இயலாததால் ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். இரண்டு மாதங்களுக்கும் மேலாக இயல்புநிலை முடங்கியுள்ளது.

இந்நிலையில், அங்கு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருகின்றன. ஜம்முவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவா்கள் கடந்த சில தினங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனா். இருப்பினும், காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் அரசியல் தலைவா்கள் இன்னும் வீட்டுக் காவலில் உள்ளனா்.

காஷ்மீரில் தகவல் தொடா்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு வசிக்கும் மக்களால் மருத்துவ உதவிகளைப் பெற இயலவில்லை என்று நியூயாா்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்நிலையில், நியூயாா்க் நகரில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித்தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

இந்தியாவில் இருக்கும் ஐ.நா.வின் பிற அமைப்புகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் சிலா் மட்டுமே காஷ்மீருக்குச் செல்ல முடிகிறது. அங்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகளை அவா்களால் அளிக்க முடியவில்லை. காஷ்மீரில் தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT