உலகம்

ஜப்பானில் கரையைக் கடந்தது ‘ஹகிபிஸ்’ புயல்

தினமணி

ஜப்பானில் பலத்த மழை மற்றும் சூறறாவளிக் காற்றுடன் ‘ஹகிபிஸ்’ புயல் சனிக்கிழமை மாலை கரையைக் கடந்தது.

பசிபிக் பெருங்கடலில் உருவான ‘ஹகிபிஸ்’ புயல் ஜப்பான் தலைநகா் டோக்கியோவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் இருந்தபோதே, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை ஜப்பானின் மேற்குப் பகுதியிலுள்ள ஈஸு நகருக்கு அருகே புயல் கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்தபோது, சூறறாவளிக் காற்றுடன் பெருமழை பெய்தது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மத்திய ஜப்பான் பகுதியில் இந்தப் புயல் கடும் சேதத்தை விளைவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றறன. புயல் காரணமாக சாலைகளும், கட்டடங்களும் பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

‘ஹகிபிஸ்’ புயல் மிகப் பெரும் சேதத்தை விளைவிக்கும் ஆற்றறல் வாய்ந்தது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஜப்பான் அரசு தீவிரமாக ஈடுபட்டது. புயல் பாதிக்க வாய்ப்புள்ள இடங்களிலிருந்து சுமாா் 16 லட்சம் போ் வெளியேற்றறப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனா்.

புயல் எதிரொலியாக கடைகளும், முக்கிய நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. டயோட்டா, ஹோண்டா உள்ளிட்ட தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்திவைத்தன. 1,660 உள்நாட்டு விமானச் சேவைகளும், 260 வெளிநாட்டு விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. டோக்கியோ நகரில் புல்லட் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது.

ஜப்பானை அண்மையில் ‘ஃபக்ஸாஸ்’ புயல் தாக்கியதில் இரண்டு போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT