உலகம்

வர்த்தகத்தின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றும் பணிக்கான சீன அரசவையின் அறிக்கை வெளியீடு

DIN

வெளி வர்த்தகத்தின் மேம்பாட்டை விரைவுபடுத்தி வர்த்தகத்தின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றும் பணிக்கான சீன அரசவையின் அறிக்கை 23ஆம் நாள் 13ஆவது தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியில் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு நடைமுறைக்கு வந்த பிறகு, உலகத் தொழில்களின் இடபெயர்வு மற்றும் வர்த்தகத்தின் விரைவான வளர்ச்சியை வாய்ப்பாகக் கொண்டு, வெளி வர்த்தகத்தின் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ள சீனா, தனது வர்த்தக தகுநிலையை வலுப்படுத்துவதோடு, வர்த்தகக் கட்டமைப்பையும் மேம்படுத்தி வருகிறது. இது, சீனாவின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கும், விரிவான திறப்புத்தன்மையுடைய புதிய கட்டமைப்பின் உருவாக்கம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் கூட்டு செழுமைக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளாக கண்டிராத மாற்றத்தை தற்போதைய உலகம் எதிர்நோக்கும் நிலையில்,சீனாவின் வெளி வர்த்தகம் எதிர்கொள்ளும் வெளிப்புறச் சூழலும் பெரிதும் மாறி வருகிறது. இதற்கென, அடுத்த கட்ட வெளி வர்த்தகப் பணியின் 10 முக்கிய அம்சங்கள் இவ்வறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

வெளி வர்த்தகத்தின் சீரான வளர்ச்சி போக்கில் தரத்தை உயர்த்துவது, சர்வதேச சந்தையில் வர்த்தக ஏற்பாடுகளை மேம்படுத்துவது, இறக்குமதி அளவை முனைப்புடன் விரிவாக்குவது, புதிய வர்த்தக தொழில்களின் வளர்ச்சியை முன்னேற்றுவது, சேவை வர்த்தகத்தை முயற்சியுடன் வளர்ப்பது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தை ஆழ்ந்த முறையில் முன்னெடுத்து செல்வது, தாராள வர்த்தக சோதனை மண்டலம் மற்றும் தாராள வர்த்தகத் துறைமுகத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது, பலதரப்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது, தொழில் புரிவதற்கான சூழலைப் பயனுள்ள முறையில் மேம்படுத்துவது, கொள்கை ரீதியான ஆதரவை வலுப்படுத்துவது ஆகியவை இப்பணியின் முக்கிய அம்சங்களாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT