முகப்பு
உலகம்

இந்தியா, ஜப்பான் பாதுகாப்புத்துறை பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங், ஷின்ஸோ அபே சந்திப்பு

பாதுகாப்புத்துறை அமைச்சக சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை பங்கேற்றார். 

உலகம்

இந்தியா, ஜப்பான் பாதுகாப்புத்துறை பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங், ஷின்ஸோ அபே சந்திப்பு

பாதுகாப்புத்துறை அமைச்சக சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை பங்கேற்றார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:59 AM
பகிர்:

ஜப்பானில் நடைபெறும் இருநாடுகளுக்கு இடையிலான வருடாந்திர பாதுகாப்புத்துறை அமைச்சக சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை பங்கேற்றார். அப்போது ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவை டோக்கியாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் டகேஷி இவாயாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இருநாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்துவது, புரிந்துணர்வு செயல்பாடுகள், சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்துவது, சர்வதேச அளவில் பாதுகாப்பு மற்றும் அமைதி உள்ளிட்ட நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பான விவகாரங்கள் குறித்து பேச்சுவாரத்தை நடத்தப்பட்டது.

மேலும் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஏவப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →