உலகம்

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகரை பணி நீக்கம் செய்தார் அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை பணி நீக்கம் செய்து செவ்வாய்கிழமை நடவடிக்கை எடுத்தார்.

DIN

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை பணி நீக்கம் செய்து செவ்வாய்கிழமை நடவடிக்கை எடுத்தார். ஜான் பால்டன் அளித்த ஆலோசனைகளின் மீது தனக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:

பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் அளித்த பல்வேறு ஆலோசனைகளின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. மேலும் இவற்றில் அதிருப்தியும், கடும் கருத்து வேறுபாடுகளும் இருந்தன. அவருடைய நடவடிக்கைகளின் மேல் இதே நிலை தான் இதர அதிகாரிகளுக்கும் காணப்பட்டது.  

எனவே ராஜிநாமா செய்யுமாறு ஜான் பால்டனை அறிவுறுத்தினேன். இதையடுத்து அவரும் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்தார். ஜான் பால்டன் இதுவரை ஆற்றிய பணிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கதத்தில் டிரம்ப் பதிவிட்டார்.

இந்நிலையில், நான் ராஜிநாமா செய்வதாகக் கூறியும் அதிபர் டிரம்ப் தான் வேண்டாம் என்று மறுத்ததோடு, அதுகுறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஜான் பால்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... பகுத்தறிய மறந்த தலைமையும் பாழாய்ப்போன மக்களும்!

கொலை முயற்சி, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளில் தவெக மீது வழக்கு

அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: முதல்வர் ஸ்டாலின்

அதிக நபா்களால் பாா்வையிடப்பட்ட சுற்றுலாத் தலம் தாஜ் மஹால்: மத்திய அரசு

கரூர் கூட்ட நெரிசல் பலி: 39 பேரில் 22 பேரின் உடல்கள் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT