முகமது ஜாவத் ஷரீஃப் 
உலகம்

எங்களைத் தாக்கினால் முழு போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை

சவூதி அரேபிய எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மிகப் பெரிய போராக வெடிக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துளளது.

DIN


சவூதி அரேபிய எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மிகப் பெரிய போராக வெடிக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துளளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப் கூறியதாவது:
சவூதி அரேபியாவில் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈரான் மீது குறை கூறி வரும் நாடுகள், தாக்குதல் மிரட்டல் விடுத்து வருகின்றன.
அவ்வாறு எங்கள் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டால் நாங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்க மாட்டோம்.
அந்தத் தாக்குதல் முழுமையான, மிகப் பெரிய போராக வெடிக்கும் என்றார் அவர்.
சவூதி அரேபியாவின் அப்காய்க் பகுதியிலுள்ள கச்சா எண்ணெய் ஆலையிலும், குராயிஸ் பகுதியிலுள்ள எண்ணெய் வயலிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அந்த ஆலைகளில் தீப்பிடித்தது.
இந்தத் தாக்குதலுக்கு யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
யேமனில் தங்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், அந்தத் தாக்குதலை ஈரான்தான்  நடத்தியது என்று அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் குற்றம் சாட்டி வருகின்றன.
ஏற்கெனவே, ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சவூதி அரேபிய எண்ணெய்க் கப்பல்கள் மர்மமான முறையில் தாக்கப்பட்டன.
அதற்கு ஈரான்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்தச் சூழலில், சர்வதேச எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாப்பதற்காக ஈரானுக்கு எதிரான கூட்டணியை அமைத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT