உலகம்

இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் விழுந்து விபத்து: இருவர் பலி 

DIN

திம்பு: இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அண்டை நாடான பூடானில் பயிற்சியின் போது விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். 

இந்தியா மற்றும் பூடான் இடையே ராணுவ பயிற்சிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பூடானில் வெள்ளியன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது பனிமூட்டத்தினால் ஏற்பட்ட மோசமான வானிலையில் காரணமாக ஹெலிகாப்டரானது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய அதிகாரி ஒருவரும், பயிற்சி பெறுவதற்காக விமானத்திலிருந்த பூடான் வீரர் ஒருவரும் பலியானார்கள் என்று தெரிய வருகிறது.

அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT