பிரதமர் மோடி 
உலகம்

உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ விரும்பும் இந்தியா: ஐ.நா சபையில் மோடி போட்ட பட்டியல் 

உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ இந்தியா விரும்புகிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது உரையில் இந்தியாவின் சாதனைகளை பட்டியவிட்டுள்ளார்.

DIN

நியூயார்க்: உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ இந்தியா விரும்புகிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது உரையில் இந்தியாவின் சாதனைகளை பட்டியவிட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளியன்று நடைபெற கூட்டத்தில்  பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் தருணம் இது.

மகாத்மா காந்தியின் போதனைகள் இன்றும் உலகிற்கே வழிகாட்டி வருகின்றன

அவரது பிறந்த நாளில் துவங்கப்பட்ட 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களக்கு இந்தியா முழுமையாக தடை விதித்து உள்ளது

மிகப் பெரியதொரு சுகாதாரத் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவில் 15 கோடி மக்களுக்கு வீட்டில் குழாய் மூலம் நீர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் 2 கோடி வீடுகள் கட்டித் தருவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல 2025-  ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது

அரசுத் திட்டங்களின் பலன்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய ஏதுவாக 37 கோடி மக்களுக்கு வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முஸ்லிம் தலைமையாசிரியரை நீக்க பள்ளி குடிநீர்த் தொட்டியில் விஷம் கலப்பு! வலதுசாரி நபர்கள் கைது

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

SCROLL FOR NEXT