உலகம்

மசூத் அஸார் மீது நடவடிக்கை தேவை: பாகிஸ்தானிடம் அமெரிக்கா கோரிக்கை 

DIN

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதத் தலைவன் மசூத் அஸார் மற்றும் பிற பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க செயல் உதவிச் செயலர் அலைஸ் வெல்ஸ் வியாழக்கிழமை தெரிவித்ததாவது, 

இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு இடையிலான பிரச்னைகளுக்கு பேசி தீர்வு காண வேண்டியது அவசியமாகும். குறிப்பாக இந்தியப் பகுதிகளில் நடைபெறும் எல்லை தாண்டிய பயங்கரவாதச் சம்பவங்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். 

எனவே பாகிஸ்தான் தங்கள் நாட்டிலுள்ள ஹஃபீஸ் சயீது, மசூத் அஸார் போன்ற பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெற்றுள்ள பெரும்பாலான பயங்கரவாதச் சம்பவங்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தான் முக்கியக் காரணமாகும். இதில் இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல், 2001-ல் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை மீதான தாக்குதல், 2016 பதான்கோட் தாக்குதல் மற்றும் பிப்ரவரியில் நடந்த புல்வாமா தாக்குதல் ஆகியவை குறிப்பிடும்படியான பயங்கரவாதச் சம்பவங்களாகும்.

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட பின்னரும், மசூத் அஸாருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT