உலகம்

ஐரோப்பா, பிரிட்டனில் முடங்கிய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம்

DIN

பிரிட்டன் முழுவதும், ஐரோப்பாவின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களான முகநூல் மற்றும் அதன் மற்றொரு சார்பு நிறுவனமான இன்ஸ்டாகிராம் ஆகியன சனிக்கிழமை திடீரென முடங்கியது.

அதில் எவ்விதப் பதிவையும் பதிவிட முடியவில்லை என அதன் பயன்பாட்டாளர்கள் மற்றொரு சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், சிறிது நேர இடைவேளைக்குப் பின்னர் அப்பகுதிகளில் முகநூலும், இன்ஸ்டாகிராமும் மீண்டும் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின.

இதனிடையே இரு செயலிகளின் இந்த திடீர் முடக்கம் தொடர்பாக முகநூல் நிறுவனம் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இச்சம்பவம் ஏதேனும் ஹேக்கர்களின் கைவரிசையாக இருக்கக்கூடும் என்று சந்தேகிப்பதாக முடங்கிய பகுதிகளைச் சேர்ந்த பயன்பாட்டாளர்கள் மத்தியில் கருத்து பரவியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT