உலகம்

சீனா: சாலை விபத்தில் 36 பேர் பலி

DIN

சீனாவில் பேருந்து மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஜியாங்சு மாகாணத்தில் 69 பேருடன் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்த பேருந்து, 3 பேருடன் வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், 36 பேர் உயிரிழந்தனர்; மேலும் 36 பேர் காயமடைந்தனர். பேருந்தின் டயர் திடீரென வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் இந்த விபத்து குறித்து கூடுதல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் ஏராளமான பேருந்துகள் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி விபத்து மரணங்கள நேரிடுகின்றன. கடந்த 2015-ஆம் ஆண்டில் மட்டும் அந்த நாட்டு சாலை விபத்துகளில் 58,000 பேர் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT