உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஈரான் தலையிடாது

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தலையிட ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ùஸரீஃப்  மறுத்துள்ளார்.

DIN

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தலையிட ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ùஸரீஃப்  மறுத்துள்ளார்.
இதுகுறித்து "என்பிசி' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடும் திட்டம் ஈரானுக்குக் கிடையாது. காரணம், அந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், யார் தோல்வியடைந்தாலும் அது பற்றி
எங்களுக்குக் கவலையில்லை. மேலும், மற்றொரு நாட்டின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம்.
ஈரான் அணுசக்தி மையங்களில் இணையதளம் மூலம் அமெரிக்கா ஊடுருவியது மிகவும் ஆபத்தானது ஆகும். அந்த நடவடிக்கையால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது என்று ஜாவத் ùஸரீஃப் குற்றம் சாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை! - டிடிவி தினகரன்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை! குகி இன மக்களின் வீடுகள் எரிப்பு!

அட்டாரி - வாகா எல்லை கொடியிறக்க நிகழ்வு! சாகசம் செய்து அசத்திய ராணுவ வீரர்கள்!

திமுகவின் திட்டங்களைப் பெண் நிர்வாகிகள் வீடுகள்தோறும் கொண்டு சேர்க்க வேண்டும் ! - M.K. Stalin

மியான்மர் பொதுத்தேர்தல் முடிவுகள்: ராணுவ ஆதரவு யுஎஸ்டிபி ஆட்சியமைக்கிறது!

SCROLL FOR NEXT