உலகம்

உலகளவில் கரோனா பலி 50ஆயிரத்தை தாண்டியது

DIN

உலகம் முழுவதும் கரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய வைரஸ் இன்று உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, உலக மக்கள்தொகையில் சுமாா் மூன்றில் ஒரு பங்கினா் தங்கள் வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

அதிகபட்சமாக இத்தாலி 13,915, ஸ்பெயின் 10,0003, அமெரிக்கா 5,334, பிரான்ஸ் 4,032 பேர் பலியாகியுள்ளனர். உலகளவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 9,80,519ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து 2,06,264க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துர்ஸ்தானம் எனும் 8ம் வீட்டின் அதிபதி தரும் பலன்கள்!

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

SCROLL FOR NEXT