உலகம்

ஸ்டீபன் கே. பன்னானின் விஷமப்பேச்சு ஓர் அரசியல் வைரஸ்!

DIN

அமெரிக்காவின் ஸ்டீபன் கே. பன்னான் அண்மையில், சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் மீண்டும் ஒரு கருத்தை பரப்பியுள்ளார். நியூயார்க் டைம்ஸ் நாளேட்டின் கட்டுரை ஒன்றில் சீன அரசு, உலகத்திற்கு அச்சுறுத்தலாகும் போன்ற விஷமக் கருத்து காணப்பட்டது.

தற்போது, சீனாவும் அமெரிக்காவும் கூட்டாக ஒத்துழைத்து, கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முக்கிய காலக்கட்டத்தில் உள்ளது. அமெரிக்காவில் சிலர் உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ள விஷமக் கருத்துக்கள் ஓர் அரசியல் வைரஸ் ஆகும். கரோனா வைரஸ் பரவல் தொடங்கியது முதல் இது வரை, சீனா மீது களங்கம் ஏற்படுத்தி, சீன-அமெரிக்க உறவில் “விரிசல்களை”இவர்கள் உருவாக்கி வருகின்றனர். அமெரிக்க வெள்ளை மாளிகையால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்டீபன் கே. பன்னான் இதில் ஒருவராவார். 

இதற்கு முன்பு, ஒரு வானொலி நிகழ்ச்சியில், செய்தியாள்களுடன் பேசிய அவர், புதிய ரக கரோனா வைரஸ், சீனாவில் ஏற்பட்ட “உயிரியல் போர்” என்ற வதந்தியை அவர் இந்நிகழ்ச்சியில் பரப்பினார். 

அமெரிக்காவில் சிறப்பு நலன் கொண்ட குழுக்களின் தேவைகளை நிறைவு செய்வது என்பது அவர் விஷமப் பேச்சின் உண்மையான நோக்கமாகும். இதன் மூலம், அவர் மேலதிகமான “அரசியல் மூலதனம்”பெறுவார். ஆனால், தற்போதைய அமெரிக்காவின் சமூகத்தைப் பொறுத்தவரை, இத்தகைய விஷமப் பேச்சு மிகவும் வெறித்தனமாகவும் அபாயமாகவும் உள்ளது. 

ஸ்டீபன் கே. பன்னானின் வெறித்தனமான இப்பேச்சு, சீனாவும் அமெரிக்காவும் ஒத்துழைத்து, கரோனா வைரஸ் பரவலைக் கூட்டாகத் தடுப்பதற்குத் தடையாக விளங்குகின்றது. அமெரிக்கத் தலைவர்களின் கூற்றுகளின்படி, இது நீக்கப்பட வேண்டிய சிக்கல், அவர் தொடர்ந்து  சீன-அமெரிக்க சர்ச்சை மற்றும் பகைமை ஏற்படுத்தினார், இரு நாடுகளுக்கிடையே கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான ஒத்துழைப்புக்கும், மேலும், அமெரிக்காவின் பொது மக்களின் உயிர் பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT