முகப்பு
உலகம்

உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கை 54 ஆயிரத்தைத் தாண்டியது!

உலக அளவில் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:



உலக அளவில் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதன்கிழமை ஒரே நாளில் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரம் வரையில் அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஸ்பெயின், பிரான்ஸ், ஈரானில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. 

தற்போதைய நிலவரப்படி உலக அளவில் நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 180 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்க்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 29 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 2 லட்சத்து 18 ஆயிரத்து 586 பேர் நோய்த்தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.