உலகம்

பூனையிடம் இருந்து பூனைக்கு கரோனா பரவும்; ஆனால்.. : சீன ஆய்வு முடிவு

IANS

 பெய்ஜிங்: பூனைக்கு கரோனா பரவும் என்பது மட்டுமல்லாமல், அதன் மூலம் மற்றொரு பூனைக்கும் கரோனா பரவும் வாய்ப்பு உள்ளதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சீனாவின் ஹார்பின் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், விலங்குகளில் பூனைக்கு கரோனா பரவும் என்றும், அதன் மூலம் மற்ற பூனைகளுக்கும் இந்நோய் பரவ வாய்ப்பிருப்பதாகவும், ஆனால், நாய், கோழி, பன்றிகளுக்கு கரோனா பரவும் வாய்ப்பு இல்லை என்றும் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம், பூனையிடம் இருந்து மனிதர்களுக்கு கரோனா பரவும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கரோனா பாதித்தவர்களின் தும்மல் அல்லது இருமல் மூலம் வெளியேறும் தொற்றுக் கொண்ட திவலை மூலம் அருகில் இருக்கும் பூனைக்கு கரோனா பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 

கடந்த வாரம் பெல்ஜியத்தில் கரோனா பாதித்த நபர் பராமரித்து வந்த பூனைக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த ஆராய்ச்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
 
கரோனா பரவும் என்பது மட்டுமல்லாமல், அதன் மூலம் மற்றொரு பூனைக்கும் கரோனா பரவும் வாய்ப்பு உள்ளதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சீனாவின் ஹார்பின் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், விலங்குகளில் பூனைக்கு கரோனா பரவும் என்றும், அதன் மூலம் மற்ற பூனைகளுக்கும் இந்நோய் பரவ வாய்ப்பிருப்பதாகவும், ஆனால், நாய், கோழி, பன்றிகளுக்கு கரோனா பரவும் வாய்ப்பு இல்லை என்றும் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம், பூனையிடம் இருந்து மனிதர்களுக்கு கரோனா பரவும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கரோனா பாதித்தவர்களின் தும்மல் அல்லது இருமல் மூலம் வெளியேறும் தொற்றுக் கொண்ட திவலை மூலம் அருகில் இருக்கும் பூனைக்கு கரோனா பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 

கடந்த வாரம் பெல்ஜியத்தில் கரோனா பாதித்த நபர் பராமரித்து வந்த பூனைக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த ஆராய்ச்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT