உலகம்

உத்தரப்பிரதேசம்: 5 நாட்களில் 50 தனி வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள்

UNI


லக்னௌ: கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் உத்தரப்பிரதேசத்தில் 5 நாட்களில் ரயில் பெட்டிகளை 50 தனி வார்டுகளாக மாற்றி வடகிழக்கு ரயில்வே சாதனை படைத்துள்ளது.

இது குறித்து வடகிழக்கு ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், கோரக்பூரில் உள்ள 38 சாதாரண ரயில் பெட்டிகள் மற்றும் அயிஷ்பாக்கில் உள்ள 12 சாதாரண ரயில் பெட்டிகளை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனி வார்டுகளாக 5 நாட்களில் மாற்றப்பட்டுள்ளது.

ரயில்வே பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலான நேரத்தில் இரவு பகல் பாராமல் உழைத்து இந்த சாதனையை செய்துள்ளனர்.  இது மட்டுமல்லாமல், தேவைப்படுவோருக்கு உணவு மற்றும் முகக்கவசங்களையும் வழங்கி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT