உலகம்

போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

DIN

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

போரிஸ் ஜான்சனுக்கும், அவரது காதலியும், வருங்கால மனைவியுமான கேரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். லண்டனில் உள்ள மருத்துவமனையில் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

முன்னதாக, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப்பிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சுமார் ஒரு மாத காலம் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, கரோனாவில் இருந்து மீண்டு வந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை  பிரதமர் அலுவலகத்துக்குத் திரும்பினார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பலி எண்ணிக்கை கொண்ட நாடுகளில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT