உலகம்

ஜூலை சீனத் தயாரிப்புத் தொழில் துறையின் பி.எம்.எய் குறியீட்டு எண்

DIN

இவ்வாண்டின் ஜூலை திங்களில் சீனத் தயாரிப்புத் தொழில் துறையின் கொள்வனவு மேலாளர் குறியீட்டு எண் PMI (Purchasing Managers' Index), 51.1 சதவீதமாகும்.

இது, கடந்த திங்களில் இருந்ததை விட 0.2விழுக்காடு அதிகரித்தது என்று சீனச் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்வனவுக் கூட்டமைப்பும் தேசிய புள்ளிவிவர ஆணையமும் ஜூலை 31-ஆம் நாள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலை திங்கள் வரை, தயாரிப்புத் தொழில் துறையின் கொள்வனவு மேலாளர் குறியீட்டு எண் தொடர்ந்து 5 திங்களாக 50விழுக்காட்டுக்கு மேல் என்ற நிலைமையில் இருக்கின்றது. குறிப்பாக, ஜூலை திங்களில் இந்தக் குறியீட்டு எண் 51 சதவீததுக்கு மேல் உயர்ந்துள்ளது.

சீனப் பொருளாதாரம் மீட்கும் வேகம் விரைவுப்படுத்தியுள்ளதை இது காட்டுகின்றது. தவிர, தயாரிப்புத் தொழில் துறையைச் சேர்ந்த 21 பிரிவுகளில், 17 பிரிவுகளின் இக்குறியீட்டு எண்கள், 50 சதவீதத்தைத் தாண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

SCROLL FOR NEXT