முகப்பு
உலகம்

பிரேசிலில் ஒரே நாளில் 51,603 பேருக்கு கரோனா: மேலும் 1,154 பேர் பலி

பிரேசிலில் புதிதாக 51,603 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 28,01,921 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 5 ஆகஸ்ட், 2020 at 12:24 PM
Brazil's COVID-19 tally up 51,603 in 24 hours to top 2.8 million: Health Ministry
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:34 PM

பிரேசிலில் புதிதாக 51,603 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 28,01,921 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

சுமார் 28 லட்சம் பேர் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டின் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. 

Advertisement

அதன்படி, பிரேசிலில் இன்று புதிதாக 51,603 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 28,01,921 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1,154 பேர் பலியானதை அடுத்து, மொத்த உயிரிழப்பு 95,819 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை சுமார் 16 லட்சம் பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.