உலகம்

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2,84,660-ஐ எட்டியது!

PTI


 
பாகிஸ்தானின் கடந்த 24 மணி நேரத்தில் 539 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2,84,660ஐ எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 15 பேர் பலியாகியுள்ள நிலையில் இதுவரை இறப்பு எண்ணிக்கை 6,097 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்றால் பாதிக்கப்பட்ட இதுவரை 2,60,764 பேர் குணமடைந்துள்ள நிலையில், 776 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிந்து அதிகபட்சமாக 1,23,849 ஆகவும், பஞ்சாப் 94,477 ஆகவும், கைபர்-பக்துன்க்வா 34,692 ஆகவும், இஸ்லாமாபாத் 15,261 ஆகவும், பலூசிஸ்தான் 11,906 ஆகவும், கில்கிட்-பால்டிஸ்தான் 2,334 ஆகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் 2,141 ஆகவும் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 20,495 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 2,147,584 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT