உலகம்

ரஷியாவில் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று: 130 பேர் பலி

UNI

ரஷியாவில் புதிதாக இன்று 4,945 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 8.97,599 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவில் உள்ள 84 மாநிலத்தில் 4,945 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. அவற்றில் 1,403 பேருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாத நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

மேலும், மாஸ்கோவில் மட்டும் அதிகபட்சமாக ஒரேநாளில் 694 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்வெர்ட்லோவ்ஸ்க்- 168, செயின்ட்  பீட்டர்ஸ்பர்க்-157 பேருக்கு வைரஸ் பதிவாகியுள்ளது.  

ஒரேநாளில் 130 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 15,131 ஆக உள்ளது. இதையடுத்து, நேற்று மட்டும் 6,494 பேர் நோயிலிருந்து குணமடைந்தனர். இதுவரை 7,03,175 நோயிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது 2,39,000 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

அழகிய தமிழ்மகள்! ஸ்ரேயா..

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

SCROLL FOR NEXT