கோப்புப்படம் 
உலகம்

பாகிஸ்தானில் புதிதாக 626 பேருக்கு தொற்று; 15,962 பேர் சிகிச்சையில் உள்ளனர்

பாகிஸ்தானில் புதிதாக 626 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,87,300 ஆக அதிகரித்துள்ளது. 

DIN

பாகிஸ்தானில் புதிதாக 626 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,87,300 ஆக அதிகரித்துள்ளது. 

பாகிஸ்தானில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரங்களை அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 626 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு 2,87,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரேநாளில் 14 பேர் உள்பட இறப்பு எண்ணிக்கை 6,153 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 2,65,215 பேர் குணமடைந்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 774 பேர் உள்பட தற்போது 15,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மொத்த பாதிப்பில் சிந்து மாகாணத்தில் - 125,289 , பஞ்சாப் - 94,993, கைபர்-பக்துன்க்வா- 35,021, இஸ்லாமாபாத் - 15,342, பலுசிஸ்தான்- 12,062, கில்கித்-பல்திஸ்தான்- 2,426 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இதுவரை 2,229,409 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை மீரா மிதுன் கைது!

கேப்டன் பொறுப்பை எளிதாக்கிய முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா: ஷுப்மன் கில்

சிகப்பு நிலவு... சாக்ஷி அகர்வால்!

பூவே... கீர்த்தி சுரேஷ்!

பரிசுத்தம்.... கல்யாணி!

SCROLL FOR NEXT