உலகம்

கரோனா: உலகம் முழுவதும் 2.16 கோடி பேர் பாதிப்பு; பலி 7,69,652  ஆக உயர்வு

DIN



வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 2,16,04,192 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7,69,652 க்கும் அதிகரித்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, புதிதாக 9,427 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,04,192 கோடியைக் கடந்தது.  

அமெரிக்காவில் 55,29,789     பேரும், பிரேஸிலில் 33,17,832 பேரும், ரஷியாவில் 9,17,884 பேரும், தென்னாப்பிரிக்காவில் 5,83,653 பேரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை இந்தியா(25,26,192) இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 746 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கரோனா தொற்று உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7,69,652 -ஆக இருந்தது. இதுவரை அமெரிக்காவில் 1,72,606 பேரும், பிரேஸிலில் 1,07,297 பேரும், மெக்ஸிகோவில் 56,543 பேரும், இந்தியாவில் 50,084 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,43,23,180 ஆகவும், 65,17,061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 64,445    பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.     
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT