முகப்பு
உலகம்

கரோனாவால் சரிந்த ஜப்பான் பொருளாதாரம்

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் ஜாப்பான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
கரோனாவால் சரிந்த ஜப்பான் பொருளாதாரம்
பகிர்:

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் ஜாப்பான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் பல்வேறு நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளன. ஜப்பானில் கரோனா பரவலால் மூடப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளால் நடப்பாண்டு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் மூடப்பட்டது தொடங்கி  கார்கள் மற்றும் பிற ஏற்றுமதிகளுக்கான வாய்ப்புகள் நிறுத்திவைக்கப்பட்டதால், இரண்டாவது காலாண்டில் ஜப்பான் அதன் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

மே மாத இறுதியில் பொதுமுடக்கம்  நீக்கப்பட்ட பின்னர் பொருளாதாரம் மந்தம் இருந்து வரும் நிலையில், பல ஆய்வாளர்கள் நடப்பு காலாண்டில் எந்தவொரு பொருளாதார மீட்பு நடவடிக்கையும் மிதமானதாகவே இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 27.8% ஆக சுருங்கியது.  2009 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜப்பானில் 17.8% வீழ்ச்சியை விட இது மிகப் பெரியது. மேலும் ஜப்பானின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு தற்போதைய 485 டிரில்லியன் யென் ஆக சுருங்கியது. 

முழு கட்டுரையைப் படிக்க →