ap20337021746764072854 
உலகம்

நிலவில் தரையிறங்கியது சீனாவின் சாங்கி-5 ஆய்வுக்கலம்

நிலவிலிருந்து கல், மண் ஆகியவற்றைத் தோண்டியெடுத்து, ஆய்வுக்காக அதனை பூமிக்கு எடுத்து வருவதற்காக சீனா அனுப்பிய விண்கலம், வெற்றிகரமாக தரையிறங்கியது.

DIN

பெய்ஜிங்: நிலவிலிருந்து கல், மண் ஆகியவற்றைத் தோண்டியெடுத்து, ஆய்வுக்காக அதனை பூமிக்கு எடுத்து வருவதற்காக சீனா அனுப்பிய விண்கலம், வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதுகுறித்து சீன தேசிய விண்வெளி ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சாங்கி-5 விண்கலம் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலவைச் சுற்றிவரும் விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டு அந்த ஆய்வுக் கலம் தரையிறக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவில் 20 நாள்களில் வலம் வரவிருக்கும் இந்த ஆய்வுக்கலம், அங்கிருந்து 2 கிலோ பாறைகள் மற்றும் துகள்களை சேகரித்து பூமிக்கு எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இத்தகைய திட்டத்தை சீனா 50 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT