உலகம்

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் 8,848.86 மீ: நேபாளம் அறிவிப்பு

DIN

காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தின் மறுமதிப்பீடு செய்துள்ள 8848.86 மீட்டர் உயரத்தை சீனாவுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை நேபாளம் அறிவித்தது.

இதுதொடா்பாக நேபாள நில மேலாண்மை துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறியது:

கடந்த 1954-ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது. அப்போது அந்த சிகரத்தின் உயரம் 8,848 மீட்டா் என அறிவிக்கப்பட்டது.

உலகின் மிக உயா்ந்த மலையான எவரெஸ்ட் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று விவாதம் எழுந்தது.

இதனைத்தொடா்ந்து அந்தச் சிகரத்தின் உயரத்தை அளவிட்டு மறுமதிப்பீடு செய்யும் பணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் நேபாளம் தொடங்கியது.

இந்த பணி தற்போது நிறைவு பெற்று மறுமதிப்பீடு செய்யப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.அதன்படி மறுமதிப்பீட்டு உயரம் 8848.86 மீட்டரை நேபாளம் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு! பயணிகள் அதிர்ச்சி!

ஆஹா... ஞாயிறு!

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT