முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 89 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் 89 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

Updated On : 8 டிசம்பர், 2020 at 12:58 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:34 PM

பாகிஸ்தானில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் 89 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,885 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 4,23,179 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் கரோனா தொற்றுக்கு 89 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 8,487 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 3,70,474 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 44,218 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2,486 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். இதில், 336 பேர் வென்டிலேட்டரில் உள்ளனர். 

Advertisement

பாகிஸ்தானில் இதுவரை 58,27,852 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33,610 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 

மாகாணவாரியாக பாதிப்பு

சிந்து - 1,86,212, பஞ்சாப் - 1,24,191, கைபர்-பக்துன்க்வா- 50,078, இஸ்லாமாபாத் - 33,061, பலுசிஸ்தான்- 17,501, கில்கித்-பல்திஸ்தான்- 4,746 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 7,390 பேர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.