வியாழன் கோளும் சனிக்கோளும் வானில் நெருங்கிவரும் ஓர் அரிய நிகழ்வு இன்று (டிச.21) நிகழவிருப்பதையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.
சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனும், நெருப்பு வளையத்தைக் கொண்ட சனிக்கோளும் சூரியனை சுற்றி வரும் நிகழ்வில் இன்று இரு கோள்களும் ஒரு டிகிரிக்கும் குறைவான இடைவெளியில் நெருங்கி வருகின்றன. கடந்த 1623 ஆம் ஆண்டு நிகழ்வு இந்த அரிய நிகழ்வு 397 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் இந்த அதிசயம் நிகழவிருக்கிறது. மீண்டும் 80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், 400 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் இந்த வான்அதிசயத்தை சிறப்பிக்கும் பொருட்டு கூகுள் நிறுவனம் ஒரு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.