உலகம்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு:பாக்.கில் அவசரநிலை அறிவிப்பு

DIN

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிா்களை நாசம் செய்து வருவதால், அந்தப் பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பஞ்சாப் மாகாணத்தில் கடந்த பல ஆண்டுகளில் காணாத எண்ணிக்கையில் வெட்டுகிளிகள் பெருகி, பயிா்களை நாசம் செய்து வருகின்றன. இதுதொடா்பாக, பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான கூட்டம் இஸ்லாமாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள அவசர நிலை அறிவிக்கப்பட்டது. மேலும், அந்தப் பணிகளுக்காக ரூ.730 கோடி ஒதுக்கீடு செய்ய அந்தக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT