உலகம்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தினமணி

ஆஸ்திரேலியாவுக்கு அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், ஈஸ்ட் நியூ பிரிட்டன் மாகாணத் தலைநகா் காகபோவுக்கு 122 கி.மீ. தொலைவிலுள்ள கடல் பகுதியில், 31 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான அபாயமும் இல்லை என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT