உலகம்

புதிய வகையில் மிரட்டும் கரோனா வைரஸ்

IANS


தைபே: தைவானில் 18வது நபருக்கு நோவல் கரோனா வைரஸ் பாதித்திருப்பதை அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.

இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், இந்த நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்புக்கான எந்த அறிகுறியும் இதுவரை ஏற்படவில்லை என்பதே.

தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் நபர், தனது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருடன் ஹாங்காங் வழியாக இத்தாலிக்கு ஜனவரி 22ம் தேதி சென்று தைவானுக்கு பிப்ரவரி 1ம் தேதி ஹாங்காங் வழியாக திரும்பியுள்ளார். 

ஏற்கனவே, இவரது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்ட நிலையில்,  20 வயதான இளைஞருக்கு அறிகுறி எதுவும் இல்லாத நிலையிலும், அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக 78 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT