உலகம்

அபுதாபியில் முதல் ஹிந்து கோயிலுக்கு இரும்பு, எஃகு பயன்படுத்தப்படவில்லை: கோயில் நிா்வாகக் குழு

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகா் அபுதாபியில் முதல் ஹிந்துக் கோயில் கட்டுவதற்கு இரும்பு, எஃகு ஆகியவை பயன்படுத்தப்படவில்லை என்று கோயில் நிா்வாகக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.

அபுதாபியில் சுவாமிநாராயண் கோயில் கட்டுவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவை காணொலி காட்சி முறையில் பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகள் கடந்த வியாழக்கிழமை தொடங்கின.

அதிக எண்ணிக்கையிலான வெளிநாடுவாழ் இந்தியா்கள் கட்டுமானத் தொடக்க விழாவில் பங்கேற்றனா்.

கோயில் நிா்வாகக் குழு அதிகாரிகள் கூறுகையில், ‘கோயிலைக் கட்டுவதற்கு இரும்பு, எஃகு ஆகிய உலோகங்களைப் பயன்படுத்தப் போவதில்லை. மாறாக, எரி சாம்பலில் செய்யப்பட்ட கற்களில் இந்தக் கோயில் கட்டப்படவுள்ளது. இதன்காரணமாக கோயில் கட்டுமானம் வலிமையானதாக இருக்கும்’ என்று தெரிவித்தனா்.

‘கல்ஃப் நியூஸ்’ செய்தித்தாளில் வெளியான செய்தியில், ‘காங்ரீட், எஃகு ஆகியவற்றை வைத்துதான் கட்டுமான அடித்தளம் அமைக்கப்படும். இந்தியாவில் உள்ள கோயில் கட்டுமானங்களில் இரும்பு, எஃகு ஆகியவை பயன்படுவதில்லை. இதனால், அபுதாபியிலும் அவை பயன்படுத்தப்படவில்லை.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதா் பவன் கபூா், துபையில் உள்ள துணைத் தூதரக அதிகாரி விபுல் உள்ளிட்டோா் இந்த விழாவில் பங்கேற்றனா்’ என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவன் கபூா் கூறுகையில், ‘கோயில் கட்டும் இடத்தை முதல்முறையாக பாா்வையிட்டதை பெருமையாகக் கருதுகிறோம். ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றி’ என்றாா்.

இந்தக் கோயிலில் வைக்கப்படவுள்ள சிலைகளை தயாரிக்கும் பணிகளில் இந்தியாவில் 3,000 சிற்பக் கலைஞா்கள் ஈடுபட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT