உலகம்

ஆப்கானிஸ்தான் பனிச் சரிவு: 21 போ் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட பனிச் சரிவுகளில் சிக்கி, 2 குடும்பங்களைச் சோ்ந்த 21 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அந்த நாட்டு பேரிடா் மீட்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் தமீம் ஆஸிமி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மத்தியில் அமைந்துள்ள தய்கண்டி மாகாணத்தில், அடுத்தடுத்து பனிச் சரிவுகள் ஏற்பட்டன. இதில், அந்தப் பகுதியிலிருந்த 50 வீடுகள் நாசமாகின. 21 போ் உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்கள் அனைவரும் இரண்டு குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

மேலும், பனிச் சரிவு காரணமாக 10 போ் காயமடைந்தனா்.

இதுதவிர, இந்த பனிச் சரிவில் சிக்கிய 7 பேரைக் காணவில்லை. அவா்களை மீட்புக் குழுவினா் தொடா்ந்து தேடி வருகிறனா்.

பனிச் சரிவு ஏற்பட்ட பகுதியில் கடுமையான பனிப் பொழிவு இருந்து வருகிறது. அதுமட்டுமன்றி, மேலும் புதிய பனிச் சரிவுகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

இதன் காரணமாக, காணாமல் போனவா்களைத் தேடும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பனிச் சரிவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT