உலகம்

கரோனா வைரஸ் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் குறைவு

சீனத் தேசிய சுகாதார ஆணையம் பிப்ரவரி 16ஆம் நாள் பிற்பகல் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி,

DIN

சீனத் தேசிய சுகாதார ஆணையம் பிப்ரவரி 16ஆம் நாள் பிற்பகல் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, கடந்த 16ஆம் தேதி வரை, வூஹான், ஹுபெய் மற்றும் சீனாவின் பிற நகரங்களில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

அவற்றில், வூஹான் நகரில் ஜனவரி 28ஆம் நாளில் அதியுயர் பதிவான 32.4 சதவீதத்திலிருந்து பிப்ரவரி 15ஆம் நாளில் 21.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. சீனாவின் மற்ற நகரங்களில் ஜனவரி 27இல் இருந்த உச்சநிலையிலான 15.9 சதவீதத்திலிருந்து பிப்ரவரி 15இல் 7.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. 

சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மீஃபேங் கூறுகையில்,

சீனாவின் பல்வேறு இடங்களில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் பயன்களையே இந்த முடிவு காட்டுகிறது. சீனாவின் மற்ற நகரங்களின் மருத்துவ உதவியுடன் குணமடைவோரின் விகிதத்தை உயர்த்துவதற்கும், உயிரிழப்போரின் விகிதத்தைக் குறைப்பதற்கும் ஹுபெய் மாநிலத்தின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நல்ல அடிப்படையை உருவாக்கியுள்ளன என்றார்.

மேலும், ஹுபெய் மாநிலத்தைத் தவிர, பிப்ரவரி 16ஆம் நாள் சீனாவின் மற்ற இடங்களில் புதிதாக கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 115 ஆகும். கடந்த 13 நாட்களாக இந்த எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிப்ரவரி 16ஆம் நாள், சீனாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1425 ஆகும். கடந்த 5 நாட்களாக, 1000க்கும் மேலானோர் குணமடைந்து வருகின்றனர். இதுவரை, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10844 ஆகும்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT