உலகம்

சீனாவின் உயிரினச் சுற்றுச்சூழல் கரோனா வைரஸால் பாதிப்பில்லை

DIN

சீனாவில் புதிய ரக கரோனா வைரஸ் பரவலுக்குப் பின், காற்று, நீரின் மேற்பரப்பு, குறிப்பாக குடிநீர் உள்ளிட்டவற்றின் மீதான உயிரினச் சுற்றுச்சூழல் தரக் கண்காணிப்புப் பணியைச் சீன உயிரினச் சுற்றுச்சூழல் துறை கண்டிப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது. 

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை, சீனாவைச் சேர்ந்த 337 மாவட்டங்கள் மற்றும் மாவட்ட நிலைக்கு மேற்பட்ட நகரங்களில் சிறந்த காற்றுடைய நாட்களின் விகிதம் 87.1 சதவீதத்தை எட்டியுள்ளதைக்  காற்று தானியங்கிக் கண்காணிப்பு முடிவு காட்டுகிறது.

நீரின் மேற்பரப்பு நிலை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததற்குச் சமாகும் என்பதை 1601 தேசிய நிலை தானியங்கி வசதிகளின் கண்காணிப்பு முடிவு காட்டியுள்ளது. இத்தொற்று நோய், குடிநீருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அறிகுறி கண்டறியப்படவில்லை. 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT