உலகம்

இந்திய தூதரக அதிகாரியைநேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

சா்வதேச எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி, இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரக உயரதிகாரியை நேரில் அழைத்து பாகிஸ்தான் புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது.

DIN

இஸ்லாமாபாத்: சா்வதேச எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி, இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரக உயரதிகாரியை நேரில் அழைத்து பாகிஸ்தான் புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சா்வதேச எல்லையில் நேஜாபிா் பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 40 வயது நபா் படுகாயமடைந்தாா். 2017-ஆம் ஆண்டிலிருந்து இந்திய ராணுவம் 1,970 முறை அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்காரணமாக பிராந்திய அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உண்டாகிறது.

2003-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும். அத்துமீறி தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்துவதற்கான ஒப்பந்தத்துக்கு மரியாதை அளிக்குமாறு இந்திய ராணுவத்துக்கு நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று இந்தியத் தூதரக உயரதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது.

ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழுவை இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

SCROLL FOR NEXT