உலகம்

'பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான் ராணுவம்'- ஜெனீவா மனித உரிமை ஆணையத்தின் வெளியே பதாகை

DIN

'சர்வதேச பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான் ராணுவம்' என சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் வெளியே பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மையினர் பதாகை வைத்துள்ளனர்.

ஜெனீவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் 43ஆவது மனித உரிமைகள் மாநாடு மார்ச் 20ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதாகை வைத்த பாகிஸ்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பு தன்னார்வ அமைப்பு கூறுகையில், 

9/11 சம்பவத்துக்குப் பிறகு சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்பகுதியாக பாகிஸ்தான் திகழ்ந்து வருகிறது. வடக்கு வாரிஸிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருந்து அல்-கொய்தா, தாலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு பாகிஸ்தான் ராணுவமும் துணை போகிறது. பயங்கரவாதம் சுதந்திரமாக இயங்க பாகிஸ்தான் அரசும் முக்கிய காரணமாக உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT