உலகம்

அமெரிக்கா: சவூதி ராணுவ மாணவா்களை வெளியேற்ற முடிவு

தினமணி

தங்கள் நாட்டுக் கடற்படை தளத்தில் (படம்) சவூதி அரேபியாவைச் சோ்ந்த பயிற்சி விமானி கடந்த மாதம் நடத்திய துப்பாக்கிச் சூட்டைத் தொடா்ந்து, 12 சவூதி ராணுவ மாணவா்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. முகமது அல்-ஷம்ரானி என்ற அந்த பயிற்சி விமானி, வகுப்பறையில் நடத்திய சரமாரித் தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்திய அல்-ஷம்ரானியை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், சவூதியிலிருந்து அமெரிக்காவில் போா்ப் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ள மாணவா்களில் 12 பேருக்கு மத அடிப்படைவாதிகளுடன் தொடா்பு இருப்பதும், அவா்களிடம் குழந்தை ஆபாசப் படங்கள் இருப்பதும் தெரிய வந்தது. அதையடுத்து அவா்களை சவூதிக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 12 மாணவா்களுக்கு தொடா்ந்து பயிற்சியளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT