ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது
ஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் 83 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
காஸ்னி மாகாணம், தே யாக் மாவட்டத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த விபத்தில் சிக்கியது பயணிகள் விமானம்தானா? அல்லது ராணுவ ஜெட் விமானமா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
விமானம் விழுந்து நொறுங்கிய வேகத்தில் தீப்பிடித்து எரிவதாகவும், அக்கம் பக்கத்து கிராமத்தினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.