உலகம்

பாகிஸ்தானில் புதிதாக 4,087 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 78 பேர் பலி

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,087 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானோர் குறித்த விவரங்களை அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,087 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,21,896 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 4,551 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 1,13,623 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மொத்த பாதிப்பில் சிந்து - 89,225, பஞ்சாப் - 78,956, கைபர்-பக்துன்க்வா- 27,170, இஸ்லாமாபாத் - 13,195, பலுசிஸ்தான்- 10,666, கில்கித்-பல்திஸ்தான்- 1,524 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 1,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 22,941 மாதிரிகள் உள்பட இதுவரை 13,50,773 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT