உலகம்

கரோனா: அமெரிக்காவில் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு; பிரேசிலை விஞ்சியது!

DIN

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 55,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 55,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 27,35,554 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று மொத்த உயிரிழப்பு 1,28,684 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 11.9 லட்சம் பேர் வரையில் குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் இன்று பதிவானது அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு ஆகும். நேற்று 52,000 பேர் பாதிக்கப்பட்டிருந்ததே இதுவரை அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாக இருந்து வந்தது. 

அதேபோன்று உலக நாடுகளில் பிரேசிலின் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பை அமெரிக்கா விஞ்சியுள்ளது. அதாவது, உலகிலேயே அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு கடந்த ஜூன் 19 ஆம் தேதி பிரேசிலில் (54,771) பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT